Posts

Showing posts from May, 2021

Real Maars Spiruluna

Image
ஸ்பைருலினாவின்  நன்மைகளைப் பற்றி காண்போம். எதிர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி. மிகக் குறைந்த விலையில், நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி. ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, ஆயிரம் கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ஸ்பைருலினாவில் இருக்கும் காமாலினோலெனிக் அமிலம், உலகில் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த ஒரு உயிரினத்திலும் இல்லை. இந்த அமிலம்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலை வலுவாக்குகிறது. மற்ற எந்த உணவையும் விட, மிக அதிக அளவில் சீரணமாகும் தன்மையுள்ள புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளது...